



Therkuvani veethi
வீரபத்திர குடும்பனார்


இவர் திரு.தஞ்சை மாயாண்டி I அவர்களின் பேரனும் மாயாண்டி II அவர்களின் மகனுமாவார்.இவர் வாழந்த காலம் 1850.இவருக்கு குடும்பனார் ,நில சுவான்தார் போன்ற பட்டங்கள் அரசு ஆவணங்களில் குறிபிடப்பட்டுள்ளன .இவர் வாழ்ந்த காலத்தில் இராமநாதபுரம் தாலுகாவில் இனரீதியான பல அடக்குமுறைகள் இருந்தன .ஆனால் இவர் வாழ்ந்த பகுதியில் அடிமைத்தனம்,அடக்குமுறை,இனவேறுபாடு இன்றி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வந்தனர்.இவரின் வழித்தோன்றல்கள் இன்றளவும் இவரின் பெயராலேயே அழைக்கப்படுகின்றனர்.இவர்களின் பூர்விக கோவில் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் செப்புப்பட்டயம் வழங்கப்பட்ட பனைக்குளத்தில் அமைந்துள்ள இராஜ மரிக்கோவில் ஆகும் .இவர்களின் குலதெய்வம் பெரும்பாலான சிவ ஆலயங்களில் துணை தெய்வமாக வணங்கப்படும் வீரபத்திரன் ஆகும்.


