



Therkuvani veethi
இவர்களே இவ்வூரின் மூத்த குடி.இவ்வூரில் முதல் முதலாக குடியேறியவர் திரு.தஞ்சை .மாயாண்டி I.இவர் தோராயமாக பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் இங்கு குடியேறினார்.இவர் சோழர்கள் பூமியான தஞ்சாவூரில் இருந்து இங்கு இடம்பெயர்ந்தளால் தஞ்சை மாயாண்டி என்று அழைக்கப்பட்டார். இவரது வழிதோன்றல்கள் மற்றும் அவர்கள் வாழ்த்த காலங்கள் பின்வருமாறு
1. மாயாண்டி II - 1825
2.வீரபத்திர குடும்பனார் - 1850
3.கருத்தசாமி,ஆண்டி,வெள்ளையன்,முருகாண்டி,பெரியண்ணன் - 1900
4.அங்கு,முத்திருலன் வெள்ளைசாமி,காயாம்பு,பாண்டியன் - 1950
5.வீரமுத்து,வேலுச்சாமி ,சேதுராசு ,இராமதாஸ் - இன்றைய தலைமுறை
இக்குடியிருப்பை மையமாக வைத்து பின்னாளில் அதற்கு கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இரண்டு குடியிருப்புகள் உருவாகின.முறையே அவை
கிழக்கு தெரு மற்றும்
மேற்கு தெரு
என்று அழைக்கப்படுகிறது.வீரபத்திர குடும்பனார் அவர்களால் உருவாக்கப்பட்ட குடியிருப்பு என்பதால் இன்றளவும் வீரபத்திரன் தெரு என்றே அழைகப்படுகிறது.
இவ்வூரில் உள்ள பிற குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் மதுரையில் இருந்து குடிபெயர்ந்து வந்ததாக சொல்லப்படுவதுண்டு.
தெற்குவாணிவீதி என்பது முன்று குடியுருப்புகளை உள்ளடிக்கிய ஒரு மள்ளர் கிராமம்.இக்குடியுருப்புகள் உருவாகிய காலங்களை வைத்து அவற்றை வரிசை படுத்தலாம்




குடியிருப்புகள்
தெற்குவாணிவீதி –கிழக்கு தெரு (1956) :
தெற்குவாணிவீதி –வீரபத்திரன் தெரு (1750) :
தெற்குவாணிவீதி –மேற்கு தெரு (1956) :
அந்த காலகட்டத்தில் இப்பகுதியில் மள்ளர்கள் சிறுசிறு குழுக்களாக பல இடங்களில் சிதறி கிடந்தனர். அதனால் அப்பகுதிகள் பெரும்பான்மையாக இருந்த சில சமூகத்தினரால் சில பிரச்சினைகள் இருந்துவந்தன.இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் பல குழுக்களாக இருந்தவர்களை ஒருங்கிணைத்து ஒரு குடியுருப்பு உருவாக்கப்பட்டது.திரு.வீரபத்திர குடும்பனார் அவர்களின் குடும்பத்தினரால் இதற்காக சுமார் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.அங்கு குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு மாரியம்மன் கோவிலும்,ஒரு சமுதாய கூடமும் கட்டப்பட்டது.இன்று இச்சமுதாய கூடம் பகுதி நேர ரேஷன் கடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இக்குடியிருப்பு உருவாகிய ஆண்டு சுமார் 1956 ஆகும்.இது மூத்த குடியிருப்பான வீரபத்திரன் குடியிருப்பிற்கு கிழக்கே அமைந்திருப்பதால் இது கிழக்கு தெரு என்று அழைக்கப்படுகிறது.இக்காலத்திலாயே இங்கு சமுதாய கூடம்/தேவேந்திரர் சங்க கட்டிடம் அமைக்கப்பட்டது.இதன் காரனமாய் இக்குடியிருப்பு சங்க மடம் என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது.
இக்குடியிருப்பு கிழக்கு தெரு உருவாகிய அதே காலகட்டத்தில் உருவானது.இது வீரபத்திரன் தெருவிற்கு மேற்கே அமைந்திருப்பதால் மேற்கு தெரு என்று அழைகப்படுகிறது.இதுவே கடைசியாக உருவாகிய குடியிருப்பு.அதன் காரனமாய் இது புதுக்குடியிருப்பு என்று அழைக்கப்படுவதும் உண்டு.
குடியிருப்புகள் மூன்றானாலும் இருப்பது ஒரே இனம்.அது " உலகாண்ட மன்னர் இனமான மள்ளர் இனம் "










