top of page

திரு.பெ.பாண்டியன் 

இக்கிராமம்  உருவாகிய காலம் முதல்  அண்டை கிராமமான உடைச்சியார் வலசை என்ற பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தது.பிற்காலத்தில் தபால்கள் வந்து சேர்வதில் சில குழப்பம் ஏற்பட்டது.அதற்கு முடிவுகட்டும் வண்ணம் இதற்கு மாற்றுபெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது.முதல்முதலில்  தெற்குவாணி வீதி என்ற பெயரை பயன்படுத்தியவர் திரு.பாண்டியன்.இவர்  திரு.வீரபத்திர குடும்பனாரின் பேரன்.இவர் ஒரு சிறந்த சிந்தனையாளர்.மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்த அந்த காலகட்டத்தில்,கடவுள் மறுப்பு கொள்கைகளை கொண்டிருந்தார்.இவர் இலங்கையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.அங்கிருந்து  தெற்குவாணிவீதி என்று பெயரிட்டு முதன்முதலாக தபால் ஒன்றை அனுப்பினார்.பாண்டிய நாடான மதுரையில் தெற்கு மாசி வீதி என்ற பகுதி உள்ளது.அவர்களின்  வழித்தோன்றல்களால் உருவாக்கப்பட்ட கிராமம், தெற்குவாணிவீதி  என்று  அழைக்கப்படுவதில் வியப்பு ஒன்றும் இல்லை.இக்கிராமத்திற்கு  இப்பெயரிட்ட இவரின்  பெயர் பாண்டியன் என்பது கூடுதல் சிறப்பு.

bottom of page