top of page


              இங்கு முதன்முதலாக குடியேறியவர் திரு.தஞ்சை.மாயாண்டி குடும்பன்  I.இவர் இங்கு குடியேறிய காலம் தோராயமாக சுமார் 1680 ஆம் ஆண்டு.இவரின் பூர்வீகம் சோழர்களின் நாடான தஞ்சை மாநகரம்.இவர் இங்கு வந்த காலகட்டத்தில் வெறும் காட்டு பகுதியாக இருந்துள்ளது. இவரின் வருகைக்கு பிறகு நிலங்கள் சமப்படுத்தப்பட்டு விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக பன்படுத்தப்பட்டது,ஆனால் இவரின் வருகைக்கு முன்னரே இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன.இங்கு தேவேந்திர குல வேளாளர்களின் ஒரு உட்பிரிவான கடையர்கள் எனப்படும் மக்கள் வாழ்ந்ததாக சொலப்படுவதுண்டு.அவர்கள் காலத்தில் இருந்த கோவிலின் கற்கள்,மண் பாண்டங்கள்,செம்பினால் செய்யப்பட்ட அடுப்பு  போன்றவை  இன்றளவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடைக்கின்றது.​
  இயற்கை சீற்றம்,நோய் தாக்குதல் போன்ற ஏதோ ஒரு காரணத்தால் இப்பகுதி முற்றிலுமாக அழிந்து திரு.தஞ்சை.மாயாண்டி I இப்பகுதிக்கு வந்த காலத்தில் வெறும் காடாக இருந்துள்ளது.அவர் இங்கு வந்த காலகட்டத்தில் இன்றைய உடைசியார்வலசை கிராமத்தில் உடைச்சி என்ற ஒரு மூதாட்டி மட்டும் வாழ்ந்து வந்ததாக  சொல்லப்படுவதுண்டு.இதன் காரணமாகவே  அக்கிராமம் உடைச்சியார் வலசை என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது.​
          உலகெங்கிலும் உள்ள மள்ளர்கள் ஆற்றுப்பகுதிக்கு அருகிலேயே தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டது போல்  திரு.தஞ்சை.மாயாண்டி I அவர்களும் வைகை ஆற்றங்கரையான இன்றைய உடைசியார்வலசை கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.இன்றளவும் இப்பகுதியில் உள்ள பெருவாரியான வயல்கள் மள்ளர்கள் கைவசமே உள்ளது.இன்று வறட்சி பகுதியாக அறியப்படுகிற ராமநாதபுரம் மாவட்டத்தில் இவரின் காலத்தில் முப்போகம் விவசாயம் இருந்துள்ளது.அய்யன் கோவில் என்று அழைக்கப்படும் காடு கண்ணி காத்த அய்யனார் கோவில் மற்றும் அதை ஒட்டியுள்ள குளம் போன்றவை திரு.தஞ்சை.மாயாண்டி I அவர்களின் வாரிசுகளான வீரபத்திர குடும்பனாரின் வழித்தோன்றல்களின் பெயராலேயே இன்றளவும் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.​
நெல் அறுவடை காலங்கள் தவிர மற்ற காலங்களில் இன்றைய தெற்குவாணிவீதி அமைந்திருக்கும் பகுதியில் திரு.தஞ்சை.மாயாண்டி I வசித்து வந்துள்ளார்.இப்பகுதியில் நெல் மற்றும் பிற பணப்பயிர்கள் விளைவிக்கப்பட்டன.இன்றைய அய்யன் கோவில் முதல் தெற்குவாணி வீதி வரை இவரின் கட்டுபாட்டில் இருந்துள்ளது. அக்காலத்தில் குறைந்தது 200 ஏக்கர் நிலமாவது திரு.தஞ்சை மாயாண்டி I அவர்கள் கட்டுபாட்டில் இருந்துள்ளது.அதன் காரணமாகவே இவரின் பேரனான திரு.வீரபத்திர குடும்பனார் அவர்கள் குடும்பனார் மற்றும் நிலச்சுவான்தார் போன்ற பட்டங்களால் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். இன்று இக்கிராமத்தை ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் தார் சாலை தஞ்சை மாயாண்டி காலத்தில் இவர்களால் விளைவிக்கப்பட்ட  விவசாய பொருட்களை வீட்டிற்கு கொண்டு வர பயன்பட்ட மாட்டுவண்டி பாதை ஆகும்.இக்கிராமத்திற்குள் வரும் தார் சாலை இன்று வரை இவர்கள் பட்டா இடங்களில்தான் உள்ளது​
                    அக்காலத்தில் ஏற்பட்ட ஒரு மர்ம நோய் தாக்குதலின் காரணமாக உடைச்சியார் வலசையில் இருந்து வெளியேறி தெற்குவாணிவீதியில் நிரந்தரமாக குடியேறினர்.

வரலாறு 

bottom of page