



Therkuvani veethi

திரு.பெ.சாமிநாதன்
இவர் வீரபத்திரனின் பேரன் ஆவார்.இவரது தந்தை பெரியண்ணன்.இவர் 1948ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் சிறந்த படைப்பாளி.இவர் 1962 ஆம் ஆண்டு,கணிதத்தில் தனது இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.இவரே தெற்குவாணிவீதி கிராமத்தின் முதல் பட்டதாரி ஆவார்.இவருக்கு அரசு வேலைகள் பல தேடி வந்தன.ஆனால் இவர் கலை,இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட காரணத்தால் அவற்றை ஏற்க மறுத்தார். இவர் பல கவிதைகள்,கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில்
வெளிவந்துள்ளது.இவரது சிறுகதை ஒன்று ALL INDIA RADIO(AIR)வில் ஒளிபரப்பாகியுள்ளது .
அன்றைய காலகட்டங்களில் பல கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் இரட்டை தம்ளர் முறை இருந்தது.ஒரு நாள் இவருடைய கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவருக்கு வேறு குவளையில் தேனீர் வழங்கப்பட்டது.சற்றும் தாமதிக்காமல், அக்கடைக்காரனின் முகத்தில் அதே குவளையில் இருந்த தேனீரை ஊற்றினார்.அன்றுடன் அக்கடையுடன் சேர்த்து இரட்டை தம்ளர் முறையும் இப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டது .இது நடந்த காலகட்டம் 1965.இவர் தனது 32வது வயதில் உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார்.


